பெரியாறு அணைக்கு செல்ல முயன்ற இடுக்கி எம்.பி.,க்கு எதிர்ப்பு வலுக்கிறது | தேனி செய்திகள் | Dinamalar
பெரியாறு அணைக்கு செல்ல முயன்ற இடுக்கி எம்.பி.,க்கு எதிர்ப்பு வலுக்கிறது
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
01:31

கூடலுார்:பெரியாறு அணைக்கு செல்ல முயன்ற இடுக்கி எம்.பி., டீன் குரியகோஸ்-க்கு தமிழக விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



சில நாட்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பில் கனமழை பெய்து நீர்மட்டம் 137.6 அடியை எட்டியுள்ளது. இதனால் வழக்கம்போல் கேரளாவில் அரசியல்வாதிகளும், மீடியாக்களும் அணை தொடர்பான பல்வேறு பிரச்னைகளை கிளப்பி பூதாகரமாக்கி வருகின்றனர்.



இதுபோன்ற பிரச்னைக்குரிய நேரத்தில் அணைப்பகுதிக்கு இரு மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் தவிர, மக்கள் பிரதிநிதிகளோ, அரசியல்வாதிகளோ செல்ல வேண்டும் என்றால் முறையான அனுமதியை பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.நேற்று முன்தினம் மாலை இடுக்கி எம்.பி., டீன் குரியகோஸ் வல்லக்கடவு வழியாக அணைப் பகுதிக்கு சென்றார்.



ஜீப்பில் வந்த எம்.பி., ஷட்டர்களுக்கு முன்பு 137 அடிக்கு மேல் தேங்கியிருந்த தண்ணீரில் கடந்து செல்ல முடியவில்லை. மேலும் பாதுகாப்பில் இருந்த கேரளா போலீசார், தாங்கள் அணைப் பகுதிக்கு செல்வதால் பிரச்னை பெரிதாகி விடும் என திருப்பி அனுப்பிவிட்டனர். இது தமிழக விவசாயிகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:இடுக்கி தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் பெரியாறு அணைக்கு எதிராக பேச மாட்டேன் என வாக்குறுதி அளித்ததால் தமிழர்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட்டு வெற்றி பெறச் செய்தனர். ஆனால் இதை மறந்து எம்.பி., அணைப் பகுதிக்கு செல்ல முயன்றது ஏற்றுக்கொள்ள முடியாதது.



தற்போது அணை அருகே புதிய அணை என்ற கோரிக்கையை கேரள அரசு கையில் எடுத்துள்ள நிலையில், புதிய அணை கட்டுவதற்கான இடத்தை எம்.பி., பார்வையிடச் சென்றாரோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது என்றார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X