2 லட்சம் ஏக்கர்: சம்பா பயிர் சாகுபடி செய்த பரப்பளவு...மாவட்டத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
01:33

கடலுார் மாவட்டத்தில், சம்பா சாகுபடி பணி ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். நடப்பு சம்பா பருவத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இதில், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் தாலுகாக்கள் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில்மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா அல்லாத கடலுார், குறிஞ்சிப்பாடி,விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி உள்ளிட்ட தாலுகாக்களில் 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது.3,550 டன் விதைகள்மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடிக்கு 3,550 மெட்ரிக் டன் விதைகள் தேவைப்படும். இதில், 30 சதவீதம் விதைகள் அரசுவேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. மீதம் 70 சதவீத விதைகள் தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும். மாவட்டத்தில் 350 உரிமம் பெற்ற தனியார் விற்பனை நிலையங்கள் உள்ளன.வேளாண் துறை மூலம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் துணைவேளாண்மை விரிவாக்க மையங்கள், தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.நடப்பு சம்பா பருவத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட 155 நாட்களில் விளையும்மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, சாவித்திரி (அ) சி.ஆர் -1009 சப்-1, மற்றும் மத்திய பட்ட ரகங்களான 135 முதல் 140 நாட்களில் விளையும் சம்பா மசூரி (அ) பி.பீ.டி-5204, டி.கே.எம்- 13, என்.எல்.ஆர்-34449, ஏ.டி.டி-39, ஏ.டி.டி-38, ஏ.டி.டி-40, ஏ.எஸ்.டி-19, ஜே.சி.எல்-1798, கோ.ஆர்-50 என 3,550 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.இதில் அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் 670 டன், அனுமதி பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்களில் 2,685 டன் நெல் விதைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது



.இது மட்டுமின்றி கூட்டுறவு வேளாண் சங்கங்கள் மூலமும் விதைகள் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது 320 டன் விதைகள் இருப்பு உள்ளது.நடப்பு ஆண்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் முன்பட்ட சம்பா சாகுபடி பணிகள் துவங்கியது.இதுவரை 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணிகள் நிறைவடைந்துள்ளது.



இதில், சம்பா மசூரி (அ) பி.பீ.டி-5204 ரக நெல் 70 சதவீதம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நேரடி நெல் விதைப்பு மூலம் 70 ஆயிரத்து 150 ஏக்கரும், நாற்று விட்டு நடவுப் பணி 1 லட்சத்து 37 ஆயிரத்து 500 ஏக்கரிலும் நிறைவடைந்துள்ளன.ஓரிரு வாரங்களில் 100 சதவீதம் சாகுபடி பணி முடிந்துவிடும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X