பெண்ணாடம்-பெண்ணாடம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த வாலிபரின் அடையாளம் தெரிந்தது.பெண்ணாடம் ரயில் நிலையத்தில் இருந்து 236வது கி.மீ., மைல் கல் அருகே திருச்சி செல்லும் மார்க்கத்தில் நேற்று காலை 7:00 மணியளவில், 29 வயது மதிக்கத்தக்க ஆண் ரயில் பாதையையொட்டி இறந்து கிடப்பதாக விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் அசோகன், ஏட்டு ராம்குமார் ஆகியோர் சடலத்தை கைப்பற்றி, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்தனர். அதில், இறந்தவர் பெண்ணாடம் அடுத்த மருதத்துார் விஜயகுமார் மகன் ராஜ்குமார், 29, என்பதும், மனநிலை பாதித்த நிலையில், ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.