எலக்ட்ரிக் கடையில் ரூ. 5,000 திருட்டு | கடலூர் செய்திகள் | Dinamalar
எலக்ட்ரிக் கடையில் ரூ. 5,000 திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
01:43

திட்டக்குடி-திட்டக்குடி அருகே எலக்ட்ரிகல் கடையின் மேற்கூரையை உடைத்து, 5 ஆயிரம் ரூபாய் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.திட்டக்குடி அடுத்த கோழியூரைச் சேர்ந்தவர் பிரபாகரன்,32; அதே பகுதியில் எலக்ட்ரிகல் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு கடையை பூட்டிவிட்டுச் சென்றார். நேற்று காலை கடையில் வேலைசெய்யும் கார்த்திக், 30, என்பவர் 7.30 மணிக்கு கடையை திறந்தபோது கல்லா திறந்து கிடந்தது. கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது.தகவலறிந்த திட்டக்குடி போலீசார் நேரில் விசாரித்தனர். அதில், கல்லாவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் திருடுபோனது தெரிந்தது. திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X