தீ விபத்தில் வீடு சேதம்: எம்.எல்.ஏ., நிவாரணம் | கடலூர் செய்திகள் | Dinamalar
தீ விபத்தில் வீடு சேதம்: எம்.எல்.ஏ., நிவாரணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
01:45

விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே தீ விபத்தில் பாதித்த குடும்பத்துக்கு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.விருத்தாசலம் அடுத்த படுகளாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல் என்பவது கூரை வீடு சமீபத்தில் தீப்பிடித்து எரிந்து சேதமானது. தொடர்ந்து, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்ச்சி நடந்தது. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தாசில்தார் சிவக்குமார் முன்னிலை வகித்தார். அதில், சமையல் பாத்திரங்கள், அரிசி, புத்தாடைகள், போர்வை, தார்பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, கவுரவ செயலாளர் வழக்கறிஞர் மணிகண்டராஜன் செய்திருந்தார். காங்., நகர தலைவர் ரஞ்சித்குமார், மணிபாலன், அருள்குமார், செல்வகுமார், அழகுதுரை, வினோத், ராஜா உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X