பள்ளிகளின் சுற்றுப்புறத்தை துாய்மைப்படுத்த கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
01:50

மாதவரம்--மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, பள்ளிகளை துாய்மைப்படுத்த வேண்டுமென, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.சென்னை மற்றும் புறநகர்களில், நவ., 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியர், சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு செல்ல உள்ளனர். அப்போது, அவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க முக கவசம் அணியவும், கிருமி நாசினி பயன்படுத்தவும், அரசு உரிய நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை மூலம் மேற்கொண்டுள்ளது.அதற்காக, பள்ளி வளாகங்கள் துாய்மை செய்யப்பட்டாலும், பல இடங்களில் பள்ளிகள் அமைந்திருக்கும் சுற்றுப்புறங்கள், அங்குள்ள பொதுமக்களின் அலட்சியத்தால் குப்பை, கழிவு, மழை, கழிவு நீர் தேங்கி, சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. அவற்றை, 31ம் தேதி மாலை அல்லது நவ., 1ம் தேதி காலைக்குள் அகற்றி, சுற்றுப்புறங்களை சுத்தமாக வைக்க, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளைச் சுற்றி கொசு மருந்து தெளிக்க வேண்டும். மேலும், பள்ளிகளுக்கு அருகே ஈ மொய்க்கும் தின்பண்டங்கள், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் 'ஐஸ்' மற்றும் இதர நொறுக்குத் தீனிகள் விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்திக்கான கடலை மிட்டாய், பொட்டுக்கடலை ஆகியவற்றை, பள்ளிகள் மூலம் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X