நண்பனுக்காக செயின் பறித்த சிறுவன் வழி தவற செய்த கும்பலுக்கு வலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
02:39

கே.கே.நகர்-நண்பனை ஜாமினில் எடுக்க, செயின் பறிப்பில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர். திரைப்படத்தை சுட்டிக்காட்டி அவனை வழி தவற செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கே.கே.நகர், ராஜமன்னார் சாலையைச் சேர்ந்தவர், பார்வதி, 65. இவர், அசோக் நகர் 16வது அவென்யூ சாலையில், 20ம் தேதி காலை நடைபயிற்சி மேற்கொண்டார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், அவரது 10 சவரன் செயினை பறித்து தப்பினார். இதில், தடுமாறி விழுந்த பார்வதிக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரித்தனர்.சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் நேற்று முன்தினம் இரவு சிறுவனை கைது செய்தனர்.தொடர் விசாரணையில், சிறுவனின் நண்பன் கொள்ளை வழக்கில் சிக்கி கொடுங்கையூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார்.அவரை ஜாமினில் எடுக்க பணம் தேவைப்பட்டதால், உதவி செய்ய வேண்டும் என, நண்பனின் உறவினர்கள் கேட்டுள்ளனர்.அப்போது, சில மாதங்களுக்கு முன் வெளியான பிரபல திரைப்படத்தை சுட்டிக்காட்டி, சிறுவர்களை போலீசார் அடிக்க மாட்டார். சிறையில் இருந்து ஒரே வாரத்தில் வெளியே வந்து விடலாம் என, மாயை காட்டி வழித்தவற செய்துள்ளனர். இதையடுத்து, அவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.இது குறித்து கே.கே.நகர் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X