அதிரடி!  மழை நீர் வடிகாலில் விதிமீறி கழிவு நீர் இணைப்பு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்க கமிஷனர் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
02:44

சென்னை-மழை நீர் வடிகாலில் சட்டவிரோதமாக கழிவு நீரை விடுவோரை கண்டறிந்து, அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, அனைத்து மண்டல அலுவலர்களுக்கும், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.



சென்னை மாநகராட்சி பகுதியில், வெள்ள பாதிப்பு ஏற்படவும், கொசுத் தொல்லை அதிகரிக்கவும், மழைநீர் வடிகால்களே பிரதான காரணம்.நகரின் அனைத்து தெருக்களிலும் மழை நீர் தேங்காமல் இருக்கவும், அவற்றை நீர்வழித்தடங்கள் வாயிலாக வெளியேற்றும் வகையிலும், மழை நீர் வடிகால்கள் கட்டப்படுகின்றன.



ஆனால், அந்தந்த பகுதி அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளின் தலையீடுகளால், மழை நீர் வடிகால்களில் சட்டவிரோதமாக கழிவு நீர் இணைப்புக்களை கொடுத்து விடுகின்றனர். இதனால், வடிகால்களில் ஆண்டு முழுதும் நீரோட்டம் காணப்படுகிறது.கழிவு நீர் காரணமாக, வடிகால்களில் கசடுகள் சேகரமாவதும், கொசு உற்பத்தி அதிகமாக இருப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.சென்னை மேயராக சைதை துரைசாமி இருந்த போது, இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. அனைத்து மண்டலங்களிலும் சட்டவிரோத கழிவு நீர் இணைப்புகளை கணக்கெடுக்க அவர் உத்தரவிட்டார்.இதன்படி, 15 மண்டலங்களிலும், 1.76 லட்சம் சட்ட விரோத கழிவு நீர் இணைப்புகள் இருப்பதாக மாநகராட்சி கணக்கெடுப்பில் தெரியவந்தது. இந்த இணைப்புகளை துண்டிக்க மாநகராட்சி முயற்சித்தது.ஆனால், அவ்வளவு இணைப்புகளையும், முறைப்படி சென்னை குடிநீர் வாரிய பராமரிப்பில் உள்ள பாதாள சாக்கடைக்கு மாற்றவும், அதற்கான கட்டமைப்பை உருவாக்கவும் கால அவகாசம் தேவை என்பதால், படிப்படியாக கழிவு நீர் இணைப்புகளை துண்டிக்க முடிவு செய்யப்பட்டது.கோடம்பாக்கம் மண்டலத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழிவுநீர் இணைப்புகள் முறைப்படுத்தப்பட்டன.மேலும், வடிகாலில் உள்ள சட்ட விரோத கழிவு நீர் இணைப்புகள் மீது, சென்னை குடிநீர் வாரியம் மட்டுமே நடவடிக்கை எடுத்து வந்தது.மாநகராட்சியில், இந்த பணியை சுகாதாரத் துறை செய்வதா; பொறியியல் துறை செய்வதா என, பனிப்போர் நடந்து வந்தது.



இதனால், வடிகால்களில் கழிவு நீர் இணைப்பு இன்று வரை தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மழை நீர் வடிகாலில் உள்ள கழிவு நீர் இணைப்புக்களை துண்டிக்கவும், இணைப்பு கொடுத்திருக்கும் நபருக்கு அபராதம் விதிக்கவும், மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கி, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.கமிஷனர் ககன்தீப்சிங், சில நாட்களுக்கு முன், தண்டையார்பேட்டை, ராயபுரம் மண்டலங்களில் பருவ மழை பணிகள் தொடர்பான ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழை நீர் வடிகாலில், சிலர் கழிவு நீர் விடுவதை கண்டறிந்தார். உடனே, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்ததுடன், உரிய மேல் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.இதைத் தொடர்ந்து தான், இந்த விவகாரத்தில் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் மாநகராட்சி கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில், 'சென்னை மாநகர முனிசிபல் சட்டப்படி, மழை நீர் வடிகால்களில் உள்ள சட்டவிரோத கழிவு நீர் இணைப்புக்களை துண்டிப்பதோடு, சம்பந்தப்பட்டவருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.வடிகாலில் கழிவு நீர் செல்வது; தெருக்களில் கழிவு நீர் வழிந்தோடுவது போன்ற சுகாதாரமற்ற நடவடிக்கைகள் இல்லாத வகையில், கவனித்துக் கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.கமிஷனரின் இந்த உத்தரவால், இனி மழைநீர் வடிகாலில் உள்ள சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் மீது நடவடிக்கை தீவிரமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



அருணாச்சலம் சாலையில் அவஸ்தை!ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை, அருணாச்சலம் சாலையில், வாரத்திற்கு இரு முறை, 'சூப்பர் சக்கர்' இயந்திரத்தை பயன்படுத்தி, மழை நீர் வடிகாலில் உள்ள கழிவு நீரை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து, சிந்தாதிரிப்பேட்டை சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அருணாச்சலம் சாலையில் உள்ள மழை நீர் வடிகால், கழிவு நீர் கால்வாயாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி அதிகாரிகள் நன்கு அறிந்தும், சட்டவிரோத இணைப்புகளை துண்டிக்க தயங்கி வருகின்றனர்' என்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X