கொடுங்கையூர்--கொடுங்கையூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளம்பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகர் ஹவுசிங் போர்டில் உள்ள ஒரு வீட்டில், கஞ்சாவை பதுக்கி விற்பதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு, நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.போலீசார் அப்பகுதியில் நடத்திய சோதனையில், பெண் ஒருவர் கஞ்சாவை பதுக்கி விற்றது தெரிந்தது.விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த தேவி, 25, என்பதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள தேவியின் கணவர் ஆகாஷை தேடி வருகின்றனர்.