போலி நகைகளை கொடுத்து மோசடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
02:54

ஆதம்பாக்கம் --நகைக்கடைகளில் போலி நகைகளை கொடுத்து, கவனத்தை திசைத் திருப்பி தங்க நகைகளை திருடிச் சென்ற கும்பலைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு பெண்ணை தேடி வருகின்றனர்.சென்னை, ஆதம்பாக்கம், கக்கன் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் தகலாராம் சவுத்ரி, 43. இவர் அதே பகுதி பிரதான சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.கடந்த வாரம் இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர், தன்னை உமா என அறிமுகப்படுத்திக் கொண்டார். பழைய நகைகளுக்கு பதிலாக புதிய நகைகளை வாங்க வந்திருப்பதாக கூறி, உரிமையாளரிடம் போலி நகைகளை கொடுத்து, 7 சவரன் நகைகளை வாங்கிச் சென்று மோசடி செய்துள்ளார்.இது குறித்த புகாரின் படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.நேற்று முன்தினம் ஆதம்பாக்கம், கருணீக்கர் தெருவில் நகைக்கடை நடத்திவரும் ஜதேந்தர் குமார், 51, என்பவரின் கடைக்கு வந்த பெண் ஒருவர், நகைகளை பார்த்து எதையும் வாங்காமல் சென்றார்.அவர் சென்ற பின், ஒன்றரை சவரன் கம்மல் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்தும் புகார் செய்யப்பட்டிருந்தது.சம்பந்தப்பட்ட நகைக் கடைகளின் கண்காணிப்பு கேமராக்களில் ஆராய்ந்த போது, இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர் ஒருவரே என்பது தெரியவந்தது.இதையடுத்து, நகைக்கடை உரிமையாளர்கள், சக நகைக்கடை உரிமையளர்களுக்கு மோசடி பெண் குறித்த புகைப்படத்தை, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக அனுப்பி வைத்திருந்தனர்.இந்நிலையில், நேற்று ஆயில்மில் பஸ் நிறுத்தம், மேடவாக்கம் மெயின்ரோட்டில் உள்ள நகைக்கடையில் போலி நகைகளை கொடுத்து, அதே பெண்ணும் மற்றும் ஒரு நபரும் ஏமாற்ற முயன்றனர்.உஷாரான நகைக்கடை உரிமையாளர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.இதில், அவர்கள் சேலம், தாதக்காப்பட்டியை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி ராதா, 35, சேலம், கொண்டாரம்பட்டியைச் சேர்ந்த சங்கர், 33 என்பது தெரியவந்தது.அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவர்களுடன் சாந்தி என்ற பெண் என மூவரும் சேர்ந்து, போலி நகைகளை கொடுத்தும், கவனத்தை திசைத் திருப்பியும் நகைகளை மோசடி செய்து திருடியது தெரியவந்தது.இந்த வகையில் திண்டுக்கல், சென்னை மாம்பலம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பல நகைக்கடைகளில் மோசடி, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.அவர்களிடம் இருந்து, மோசடி செய்ய வைத்திருந்த போலி நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.பின், இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சாந்தியை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X