கடம்பத்துார்-கடம்பத்துார் ஒன்றிய நெடுஞ்சாலையில், அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர் மீண்டும் வலம் வர துவங்கிஉள்ளன.கடம்பத்துார் ஒன்றியத்தில் கடம்பத்துார் - மப்பேடு, பேரம்பாக்கம் நெடுஞ்சாலை, தண்டலம் - அரக்கோணம் போன்ற நெடுஞ்சாலைகள் உள்ளன.இவற்றின் ஓரம் கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர் வைக்க கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கடம்பத்துார் - மப்பேடு நெடுஞ்சாலையில், கடம்பத்துார் மற்றும் கொண்டஞ்சேரி பகுதியில் பேனர், கொடிக்கம்பம் வைப்பதில், அரசியல் கட்சியினரிடையே போட்டி நிலவுகிறது.தடுக்க வேண்டிய காவல் துறையினர் கண்டும், காணாமல் செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலையோர பேனர், கொடிக்கம்பம் வைப்போர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.