பெரியகுளம் : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியில் பாஸ்கரன் 40. வீட்டில் விற்பனைக்காக ரூ.2.04 லட்சம்மதிப்புள்ள 1750 பதுக்கல் மதுபாட்டில்களை தென்கரை போலீசார் 2 நாட்களுக்கு முன் பறிமுதல் செய்தனர்.
இவ் வழக்கில் பாஸ்கரன், வடுகபட்டி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், விற்பனையாளரை தேடி வந்தனர். இந்நிலையில் பாஸ்கரன் நண்பர் ரமேஷ் கைது செய்து மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.