திருப்போரூர்--காயார் கிராமத்தில், சவுக்கு அறுவடை பணியில், மேல்மருவத்துார் தொழிலாளிகள் ஈடுபட்டுஉள்ளனர்.திருப்போரூர் அடுத்த காயார் கிராமத்தில், நெல் உட்பட பல பயிர் வகைகள் பயிரிடப்படுகின்றன.இருப்பினும், மற்ற சாகுபடிக்கு சமமாக, இக்கிராமத்தில் மட்டும், சவுக்கு சாகுபடிகளை விவசாயிகள் அதிகளவு பயிரிடுகின்றனர்.பயிரிடப்பட்ட சவுக்கு மரங்கள், தற்போது அறுவடை செய்யப்படுகின்றன. மேல்மருவத்துாரில் வசிக்கும் பழங்குடியின இருளர்கள் 20 பேர், காயாருக்கு வந்து, அறுவடை பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.இருளர்கள் கூறுகையில், 'போதிய வேலை இல்லை. தெரிந்த ஒருவர் மூலம், காயாரில் மரம் வெட்டும் வேலை செய்கிறோம். ஒரு டன் மரங்கள் வெட்ட, 1,000 ரூபாய் கூலி தருகின்றனர்' என்றனர்.