பெண்ணிடம் தாலி பறிப்புகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கணேசபுரத்தைச் சேர்ந்தவர் விநாயகம் மனைவி லட்சுமி, 49. இவருக்கு உடல் நலம் சரியில்லாததால், காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு, கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.இவர்களை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள், புதுப்பாக்கம் அருகே, லட்சுமி கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்து சென்றனர். இதில் நிலை தடுமாறி தம்பதி விழுந்ததில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்து காஞ்சி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.மூதாட்டியிடம் செயின் 'அபேஸ்'கூடுவாஞ்சேரி: சென்னை ஆவடியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி செல்வி, 50. இவர் தன் கணவருடன், இரு சக்கர வாகனத்தில், கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்தார்.நேற்று ஊரப்பாக்கம் அருகில் சென்றபோது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், செல்வி கழுத்திலிருந்த 6 சவரன் செயினை பறித்துச் சென்றனர். அவரது புகாரை, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.விபத்தில் வாலிபர் மரணம்ஈக்காடு: திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கார்த்திக், 28. நேற்று முன்தினம், தன் இரு சக்கர வாகனத்தில் வரும்போது, ஈக்காடு அருகில், சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளானார்.இதில் பலத்த காயமடைந்த கார்த்திக், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். புல்லரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.பூச்சிக்கொல்லி மருந்து குடித்தவர் பலிதிருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுமான் பாஷா மகன் ஷாயின் ஷா, 27. நேற்று முன்தினம் தன் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தெரியாமல் குடித்ததால் மயக்கமடைந்தார்.உறவினர்கள் அவரை, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தந்தை புகாரின்பேரில், புல்லரம்பாக்கம் போலீசார்விசாரிக்கின்றனர்.நகை திருடிய மூவர் சிக்கினர்திருத்தணி: திருத்தணி பழைய திரவுபதியம்மன் கோவில் அருகே, குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகிக்கும்படி திரிந்த மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.அதில், திருச்சி ஸ்ரீரங்கம் கோபால், 39, மூர்த்தி, 39, மற்றும் பெங்களூரு கோலார் பகுதி சரவணன், 38, என்பது தெரிய வந்தது. இவர்கள், நகை திருட்டில் ஈடுபட்டு வருவதும் தெரிந்தது.அவர்களிடம் இருந்த 3 சவரன் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்; மூவரையும் கைது செய்தனர்.மணல் கடத்தியவர் கைதுதிருத்தணி: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, தமிழக - ஆந்திர மாநில எல்லையான திருத்தணி பொன்பாடி சோதனைச் சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர்.அப்போது, நெல்லுார் மாவட்டத்தில் இருந்து திருத்தணி நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதித்தனர். லாரியில், தார்ப்பாய் அடியில், ஒரு வரிசை மட்டும் தவுடு மூட்டைகள் இருந்தன. அதன் அடியில் ஆந்திர மணல் மூட்டைகள் இருந்தன.திருத்தணி போலீசார், லாரியை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுனர் நெல்லுார் செஞ்சுரத்தினம், 36, என்பவரை கைது செய்தனர்.