வாலாஜாபாத்-துாய்மை கணக்கெடுப்பு குறித்து, ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி கூட்ட அரங்கில், நேற்று காலை நடந்த துாய்மை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாமிற்கு, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா தலைமை தாங்கினார்.வாலாஜாபாத் வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ஊராட்சிகளில் துாய்மை கணக்கெடுப்பு குறித்து, ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு விளக்கி கூறினார்.மேலும், மொபைல் போனில் எவ்வாறு துாய்மை கணக்கெடுப்பது, அதை பதிவேற்றம் செய்வது என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.துாய்மை கணக்கெடுப்பு முறையாக மேற்கொள்ளப்படும் என, ஊராட்சி தலைவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதில், 61 ஊராட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் செயலர்கள் பங்கேற்றனர்.