சில வரி செய்திகள் | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
சில வரி செய்திகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
04:39

2,753 பேருக்கு கடன் உதவிசெங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், அனைத்து வங்கிகளும் இணைந்து, முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சார்பில், வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம், நேற்று முன்தினம் திம்மாவரத்தில் நடத்தப்பட்டது.வாடிக்கையாளர்களிடம், கடன் விண்ணப்பம் பெறப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்று, அனைத்து வங்கிகளின் சார்பில் 2,753 பயனாளிகளுக்கு, 100 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்.இந்தியன் வங்கி பொது மேலாளர் ராஜேஸ்வரன், மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.புதிய மின் மாற்றிகள் திறப்புசெங்கல்பட்டு: செங்கல்பட்டு ஆலப்பாக்கம் ஊராட்சி, வேதநாராயணபுரம் பகுதியில், திருகுறிப்பு தொண்டர் நகர், ஏ.ஆர்.சி. நகர் ஆகிய பகுதிகளில், குறைந்த மின்னழுத்தத்தால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இது குறித்த புகாரையடுத்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், தலா 100 கி.வோ., இரண்டு மின் மாற்றிகள் அமைக்கும் பணி, சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. ஊராட்சி தலைவர் பரிமளா, இரு புதிய மின் மாற்றிகளை துவக்கி வைத்தார். கூடுதல் பஸ்கள் இயக்கணும்திருத்தணி: திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு ஆகிய பாடப் பிரிவுகளில், 2,500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.பெரும்பாலான மாணவர்கள், திருத்தணி பஸ் நிலையத்தில் இருந்து திருவள்ளூர், சென்னை நோக்கி செல்லும் பஸ்களில் பயணம் செய்கின்றனர். காலை நேரத்தில் கல்லுாரிக்கு செல்வதற்கு, குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுவதால், மாணவர்கள் பஸ்சில் தொங்கியபடியும், பஸ் கூரையின் மீது அமர்ந்தும் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.கல்லுாரிக்கு செல்வதற்கேற்ப, காலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிதிருத்தணி: திருத்தணியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லுாரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு, அது குறித்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் ராதிகா வித்யாசாகர் தலைமையில், மண்டல பேரிடர் மேலாண்மை மேற்பார்வையாளர் ராஜேஷ், செஞ்சிலுவை சங்க திருவள்ளூர் மாவட்ட தலைவர் நந்தகுமார் ஆகியோர், செஞ்சிலுவை சங்கத்தில் மாணவர்களின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும் சேவை வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்பங்கேற்றனர்.திருத்தணி தனியார் பொறியியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் ஆறுமுகம், மாணவர்களை வரவேற்றார்.மின் விளக்குகள் அமைக்க வேண்டும்திருத்தணி: திருத்தணி ஒன்றியம் தாடூர் ஊராட்சிக்கு உட்பட எல்.என்.கண்டிகை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.அத்தியாவசிய பணிகள் மற்றும் வேலைக்கு செல்வோர், திருத்தணிக்கு செல்வதற்கு 1 கி.மீ., துாரம் நடந்து, இ.என்.கண்டிகை பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற வேண்டும்.இ.என். கண்டிகையில் இருந்து எல்.என்.கண்டிகை செல்லும் ஒன்றிய சாலையோர மின் கம்பங்களில் விளக்குகள் இல்லாததால், இரவில் கடும் அச்சத்துடன் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் நடந்து செல்கின்றனர்.எனவே, இ.என்.கண்டிகை - எல்.என்.கண்டிகை இடையே, 12 மின் கம்பங்களில் ஊராட்சி நிர்வாகம் மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X