பழமையான தவ்வை சிலை உள்ளாவூரில் கண்டெடுப்பு | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
பழமையான தவ்வை சிலை உள்ளாவூரில் கண்டெடுப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
04:39

வாலாஜாபாத்-கடந்த 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய மூத்த தேவி சிலையை, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் நேற்று கண்டெடுத்தனர்.உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:உள்ளாவூர் அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று ஆய்வு செய்தோம். கோவிலுக்கு பின்புறம், 10ம் நுாற்றாண்டு சோழர் காலத்தைச்சேர்ந்த மூத்த தேவி என அழைக்கப்படும் தவ்வை சிலையை கண்டறிந்தோம். இது 1,100 ஆண்டுகளுக்குமுந்தையது.தவ்வை தலையில், கரண்ட மகுடம், காதில் மகர குண்டலம், கழுத்தில் சரப்பளி ஆபரணம், மார்பில் சன்ன வீரம், தோள்களில் வாகுவளையங்கள், கைகளில் வளையல்கள், பருத்த வயிறோடு, விரிந்த கால்கள், இடை முதல் பாதம் வரை நீண்ட ஆடை, மார்பில் முப்புரி நுாலுடன் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டு உள்ளது.இவருக்கு, மூத்த தேவி, தவ்வை, ஜேஷ்டாதேவி ஆகிய பெயர்களும் உண்டு. இவர், திருமால் மனைவி லட்சுமிக்கு மூத்த சகோதரி. நந்திவர்ம பல்லவனின் குல தெய்வமாக இருந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X