துவங்கியது! காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள்....
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
04:45

காஞ்சிபுரம்--ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து இரு வாரம் கடந்த நிலையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் துவங்கியுள்ளன.



இம்முறை குன்றத்துார், மாங்காடு, நந்திவரம் - கூடுவாஞ்சேரி ஆகிய பேரூராட்சிகளுக்கு தேர்தல் கிடையாது என, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6ம் தேதி முதற்கட்டமாகவும், 9ல் இரண்டாம் கட்டமாகவும் நடந்து முடிந்தது.



கடந்த, 12ல் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, வெற்றி பெற்றவர்கள், 20ல் பதவியேற்றனர்.ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு, மாநில தேர்தல் ஆணையம் குறைவான கால அவகாசமே கொடுத்ததால், அனைத்து பணிகளையும் ஒரு மாதத்தில் செய்ய வேண்டியிருந்தது.இதனால் பல்வேறு பணிகளில் சொதப்பல்கள் இருந்தன. இருப்பினும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் துவங்க, மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் துவங்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்துார், மாங்காடு, ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர் என ஐந்து பேரூராட்சிகளும், காஞ்சிபுரம் மாநகராட்சியும் உள்ளன.இதில் ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர் பேரூராட்சிகளுக்கும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மட்டுமே இம்முறை தேர்தல்நடைபெற உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், இடைக்கழிநாடு, கருங்குழி, அச்சிறுப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளில் மட்டுமே நடக்கிறது.இதற்காக காஞ்சியின் மூன்று பேரூராட்சிக்கு தலா ஒருவர் என, மூன்று தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆறு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என, ஒன்பது அலுவலர்களை, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி நியமித்துள்ளார்.




இதற்காக காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பழைய பி.டி.ஓ., அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், காஞ்சிபுரம் குடோனுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு தேர்தலுக்காக கடலுார், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து, 8,064 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வந்தன.மறைமலை நகர் நகராட்சி சமுதாய கூடத்தில், 7,500 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், மதுராந்தகம் நகராட்சி சமுதாய கூடத்தில், 564 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணியில், பெங்களூரு 'பெல்' நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள், நேற்று ஈடுபட்டனர். தேர்தல் அதிகாரிகளுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்த பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.




இத்தேர்தலில் 1,000 வாக்காளருக்கு ஓர் ஓட்டுச்சாவடி என முடிவெடுத்து, முந்தைய நகர்ப்புற தேர்தல் ஓட்டுச்சாவடிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஓட்டுச்சாவடி விபரங்களை ஆணையகத்திற்கு, நவ., 7க்குள் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்புஊரக உள்ளாட்சி தேர்தலை போலவே, விரைந்து தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். குன்றத்துார், மாங்காடு பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதால், வார்டு மறுசீரமைப்பு போன்ற பணிகள் செய்த பின், தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிகாரிகள்காஞ்சி கலெக்டர் எச்சரிக்கைகிராம ஊராட்சிகளில் பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக, அவர்களது கணவன், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் என யாரையும் செயல்பட அனுமதிக்க கூடாது. ஊராட்சி கூட்டங்களிலும், ஊராட்சி சம்பந்தமாக எந்த தலையீடும் உறவினர்களிடம் இருக்க கூடாது என, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவுரைகளை பின்பற்றாமல் செயல்படுவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட ஊராட்சி கூட்டங்களில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள்அனைத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, கறாராக கூறியுள்ளார்.இ.வி.எம்., இயந்திரம் பயன்பாடுஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக பதவி இடங்கள் உள்ள காரணத்தால், இ.வி.எம்., என சொல்லப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முடியவில்லை. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறைவான பதவி இடங்களே உள்ளதால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளனர். இதனால், ஓட்டு எண்ணும் பணி எளிதாக இருக்கும். பதிவான ஓட்டுகள் தெளிவாக இருக்கும். ஆனால், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், இன்று வரை ஓட்டு எண்ணிக்கையின் விபரங்கள் சரிவர கிடைக்காமல் உள்ளன. குறிப்பாக, செல்லாத ஓட்டுகள் எத்தனை பதிவானது என்ற விபரங்களை தேர்தல் அதிகாரிகளால் இன்று வரை கணக்கிட முடியவில்லை. ஒரு மாவட்டத்தில், செல்லாத ஓட்டுகள் எத்தனை பதிவாகின என்ற விபரங்களை கூட, மொத்தமாக கணக்கிட முடியாத சூழலே நிலவுகிறது. இந்த சிக்கல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இருக்காது.




எந்தெந்த பேரூராட்சி்கள்? காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்துார், மாங்காடு; செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்திவரம் - கூடுவாஞ்சேரி, பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட உள்ளதால், தேர்தல் நடக்காது என, அதிகாரிகள் கூறுகின்றனர். தாம்பரம் மாநகராட்சி பகுதியுடன் இணையும் பெருங்களத்துார், பீர்க்கங்கரணை, சிட்லபாக்கம், மாடம்பாக்கம், திருநீர்மலை பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படுமா என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X