புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலம் அடுத்துள்ள, தாளவாடி மலைப்பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என, பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. மேலும் ஐந்து கோடி ரூபாய் செலவில் ஒழுங்குமுறை விற்பனை கூடம், சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு கலைக் கல்லூரி, ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைப்பதற்கு இடம் தேர்வு குறித்த ஆய்வு நேற்று மேற்கொள்ளப்பட்டது. நீலகிரி எம்.பி., ராஜா தலைமையில் நடந்த ஆய்வில் கோபி ஆர்.டி.ஓ., பழனி தேவி, தாளவாடி தாசில்தார் உமாமகேஸ்வரன்? மற்றும் வேளாண் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், கல்லூரி, ஒழுங்குமுறை விற்பனை கூடம் கட்டுவதற்கு தாளவாடியில் இருந்து பாரதிபுரம் செல்லும் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. தாளவாடி நகரில், உழவர் சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.