ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஏழாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தி, 1.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதுபற்றி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு மாவட்டத்தில் ஏழாவது மெகா தடுப்பூசி முகாம் வரும், 29, 30ல் நடக்கிறது. இதில், 1.20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத, 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.