ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வான்முகில் அமைப்புடன், சுடர் தொண்டு நிறுவனம் இணைந்து, பத்து மலை கிராமங்களில் அரசமைப்பு உரிமை கல்வி திட்டத்தை துவக்குகின்றனர். இதற்கான துவக்க விழா ஈரோட்டில் நடந்தது. சுடர் தொண்டு நிறுவன இயக்குனர் நடராஜ் வரவேற்றார். வான்முகில் அமைப்பு இயக்குனர் பிரிட்டோ தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியாதேவி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் சுப்பிரமணியன், செங்குந்தர் கல்வி கழக செயலாளர் சிவானந்தம், தமிழ்நாடு மக்கள் சிவில் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி உட்பட பலர் பங்கேற்றனர். கிராமங்கள் மற்றும் பிற பகுதிகளில் உள்ள பள்ளிகளில், ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள சட்டங்கள், அனுமதிகள், உரிமைகள் போன்றவை குறித்து விளக்க உள்ளனர்.