நவ.,1ல் பள்ளிகள் திறப்பு: 1.06 லட்சம் மாணவர்கள் தயார் | ஈரோடு செய்திகள் | Dinamalar
நவ.,1ல் பள்ளிகள் திறப்பு: 1.06 லட்சம் மாணவர்கள் தயார்
Added : அக் 28, 2021 | |
Advertisement
 

ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த, 1.06 லட்சம் மாணவ, மாணவியர் நவ.,1ல் பள்ளி திறப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்தாண்டு ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு செப்., 1 முதல் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. நவ.,1லிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் நடக்க உள்ளது.

இதுபற்றி பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 1,287 அரசு துவக்க நிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. 1,06,520 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். ஈரோடு மாநகராட்சியில் உள்ள, 73 பள்ளிகளில், 15,148 மாணவ, மாணவியர் உள்ளனர். பவானி, பவானிசாகர், கோபி, பவானி நகராட்சியில் உள்ள, 26 பள்ளிகளில், 5361 மாணவ, மாணவிகள் உள்ளனர். டவுன் பஞ்.,ல் உள்ள, 268 பள்ளிகளில், 23,427 மாணவ,மாணவியர் பயில்கின்றனர். அரசு பள்ளிகளில் தூய்மை பணி தீவிரமாக நடக்கிறது. நவ.,1ல் பள்ளிகள் திறக்கப்படும். மாணவ,மாணவிகளின் உடல் நிலை குறித்து தினமும் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X