ஓமலூர்: பெரியார் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பயிற்சி மையத்தை, துணைவேந்தர் ஜெகநாதன் தொடங்கி வைத்தார். சேலம், கருப்பூர் பெரியார் பல்கலை, 25ம் ஆண்டு தொடக்க விழா நோக்கி பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, என்.டி.சி., ட்ரெய்னிங் அகாடமி, இஷ்டம் பவுண்டேஷன் இணைந்து, மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பயிற்சி மையத்தை, துணைவேந்தர் ஜெகநாதன் நேற்று தொடங்கிவைத்தார். ஓய்வு பெற்ற சுங்கத்துறை கமிஷனர் முத்துசாமி, கார்ப்பரேஷன் வங்கியின் முன்னாள் துணை பொதுமேலாளர் ராஜேந்திரன், குடிமை பணித்தேர்வு குறித்து பயிற்சி அளித்தனர். பேராசிரியர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.