அவசர சிகிச்சை பிரிவு செயல்படுவது எப்போது? அதிகாரி உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
10:11

சங்ககிரி: சங்ககிரி அரசு மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளை அனுமதிக்க, சுகாதார அதிகாரி உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லாததால், நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

சங்ககிரியில், லாரி, பட்டறை, ஒர்க்?ஷாப் உள்ளிட்டவற்றில், ஏராளமான தொழிலாளர் பணிபுரிகின்றனர். அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அதனால் கடந்த பிப்ரவரியில், சங்ககிரி அரசு மருத்துவ மனையில் விபத்து, அவசர சிகிச்சைக்கு கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நோயாளியும் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து மக்கள் புகாரால், அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தை, ஒரு வாரத்தில் திறந்து நடைமுறைக்கு கொண்டு வர, கடந்த, 13ல் அந்த மருத்துவமனையின், மருத்துவ அலுவலருக்கு, சேலம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டார். தற்போது, 15 நாளாகியும் நடவடிக்கை இல்லை. இதனால் விபத்தில் சிக்கும் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சங்ககிரி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் திருமாவளவன்(பொ) கூறுகையில், ''அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான உபகரணங்கள், பணியாளர்கள் தேவையென, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மூலம், அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். அவை வந்த பின், அவசர சிகிச்சை பரிவு செயல்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X