சேலம்: சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பின்புறம், கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மூன்று நாளாக துர்நாற்றம் வீசியதோடு, சாக்கடை நீர் பீறிட்டு, துளைகள் வழியே கசிய தொடங்கியது. நேற்று காலை, 11:00 மணிக்கு, பொக்லைன் உதவியுடன், அடைப்பு எடுக்கும் பணி நடந்தது. அப்போது, தரைக்கு அடியில் பிரதான மின்கேபிள் ஒயர் துண்டாகிவிட்டது. அதனால், மருத்துவ மனையின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. நிலைமையை சமாளிக்க, ஜெனரேட்டர் இயக்கப்பட்டன. நீண்ட போராட்டத்துக்கு பின், மாலை, 5:00 மணிக்கு கேபிள் சரிசெய்யப்பட்டு, மின்வினியோகம் கிடைத்தது.