ஓமலூர்: பல்லாங்குழியாக இருந்த தாரமங்கலம் - ஓமலூர் நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. தாரமங்கலம் - ஓமலூர் வரை உள்ள, 10 கிலோ மீட்டர் சாலையில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். குறிப்பாக, வேலாகவுண்டனூர், எம்.செட்டிப்பட்டி பஸ் ஸ்டாப், சிக்கம்பட்டி என, தாரமங்கலம் பைபாஸ் வரை பல்வேறு இடங்களில், 1 அடி ஆழத்துக்கு பள்ளங்கள் ஏற்பட்டிருந்தின. இதுகுறித்து, நமது நாளிதழில், கடந்த, 5ல் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், 24, 25ல், ஓமலூர் ரயில்வே பாலத்திலிருந்து, தாரமங்கலம் பைபாஸ் ரவுண்டானா வரை, பள்ளங்களை சீரமைத்தனர். இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் எளிதாக செல்கின்றனர்.