ஆத்தூர்: ஆத்தூர், எம்.ஜி.ஆர்., காலனியில், சாலை, சாக்கடை, குடிநீர் போன்ற அடிப்படை வசதி கள் செய்துதரக்கோரி, நகராட்சி யில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதைக்கண்டித்து, 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நேற்று, மறியலில் ஈடுபட்டனர். ஆத்தூர் டவுன் போலீசார், நகராட்சி அலுவலர்கள், அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர். பின், அவர்கள் கலைந்து சென்றனர்.