சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், காளி கவுண்டர் காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த வினோத்குமார், கடந்த செப்., 6ல் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 23 பேரை போலீசார் கைது செய்தனர். அதில், கிச்சிப்பாளையம், காளி கவுண்டர் காட்டை சேர்ந்த நந்தா, 22, அதே பகுதியை சேர்ந்த முரளி, 48, ஆகியோரை, நேற்று முன்தினம், குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய, எஸ்.எம்.சி., காலனி விஜய், 25, கொலையாளிகளுக்கு பண உதவி செய்த பழனிசாமி, 44, ஆகியோரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கிச்சிப்பாளையம் போலீசார் பரிந்துரைத்தனர். அதையேற்று, போலீஸ் கமிஷனர் நஜ்முல் ?ஹாதா உத்தரவிட்டதால், சேலம் மத்திய சிறையில் உள்ள இருவர் மீதும், குண்டாஸ் பாய்ந்தது. இதன்மூலம் வாலிபர் கொலை வழக்கில் குண்டாஸ் கைது எண்ணிக்கை, நான்காக உயர்ந்தது.