ஜாமின் கிடைத்த நிலையில் சிறையில் கைதி சாவு | சேலம் செய்திகள் | Dinamalar
ஜாமின் கிடைத்த நிலையில் சிறையில் கைதி சாவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
10:19

ஆத்தூர்: ஜாமின் கிடைத்த நிலையில், ஆத்தூர் சிறையில் இருந்த கைதி உயிரிழந்தார்.


சேலம், கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த, ஆட்டோ டிரைவர் கார்த்திக், 34. இவர், லாட்டரி விற்றபோது, கிச்சிப்பாளையம் போலீசார் கைது செய்து, கடந்த, 17ல், ஆத்தூரில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம், அவருக்கு, சேலம் நீதிமன்றத்தில் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், நேற்று, சிறையில் இருந்து விடுவிக்கப்பட இருந்தார். ஆனால், காலை, 6:10 மணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை, '108' அவசரகால ஆம்புலன்ஸில், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறுந்து விட்டதாக கூறினர். கார்த்தியின் குடும்பத்தினர், உறவினர்கள், இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி, அரசு மருத்துவமனை முன் கோஷம் எழுப்பினர். அவர்களிடம், 'பிரேத அறிக்கைக்கு பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் கூறினர். பின், அவரது உடலை, ஆத்தூர் முதலாவது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரங்கராஜ் ஆய்வு செய்தார். இறந்த கார்த்திக்கு, மனைவி நீலா, 6 வயதில் மகள் சிவவர்ஷினி, 5 மாத பெண் குழந்தை யாழ்மதி உள்ளனர்.


உறவினர்கள் சாலை மறியல்: சடலத்தை வாங்க மறுத்து, கார்த்திக் மனைவி நீலா, 30, உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள், 100க்கும் மேற்பட்டோர், நேற்று இரவு, 7:25 மணிக்கு, கலெக்டர் அலுவலகம் முன், சாலை மறியலில் ஈடுபட்டனர். சாவில் சந்தேகம் உள்ளதால், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், அவர்கள் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X