பட்டா திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் | சேலம் செய்திகள் | Dinamalar
பட்டா திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
10:21

சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் புதன், வெள்ளிதோறும் பட்டாவில் திருத்தம் மேற்கொள்ளும் சிறப்பு முகாம் நடக்கிறது. அனைத்து வருவாய் வட்டத்தில் முகாம் நடக்கிறது. அக்., 29ல்(நாளை), எருமாபாளையம் ஊராட்சி கலையரங்கம், நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், வி.ஏ.ஓ., அலுவலகங்கள், செட்டிச்சாவடி ஊராட்சி அலுவலகத்தில் முகாம் நடக்கிறது. வாழப்பாடி வருவாய் ஆய்வாளர் அலுவலகம், ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கம், கல்வடங்கம் சமுதாய கூடம், பக்கநாடு சென்றாய பெருமாள் சமுதாய கூடம், காவேரிபுரம், கருங்கல்லூர், காமலாபுரம், காøடாயம்பட்டி, அப்பமசமுத்திரம், கிழக்கு ராஜாபாளையம் ஆகிய வி.ஏ.ஓ., அலுவலகங்கள், கடம்பூர் கிராம சேவை மையம், பெத்தநாயக்கன்பாளையம் சமுதாயக்கூடம் ஆகிய இடங்களிலும், சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கணினி திருத்தம் சார்ந்த மனுக்களுக்கு, அன்றே தீர்வு காணப்படும். இப்பணி, 2022 பொங்கல் பண்டிகைக்கு முன் முடிக்கப்பட உள்ளதால், விவசாயிகள், வீட்டு உரிமையாளர்கள் பட்டாவில் திருத்தம் செய்ய, முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X