கூட்டுறவு வங்கியில் நகை கடன் வழங்கி ரூ.2.51 கோடி மோசடி: 4 பேர் சஸ்பெண்ட்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
10:24

ஆரணி: ஆரணி கூட்டுறவு நகர வங்கியில், போலி நகை மற்றும் நகை மதிப்பீட்டிற்கும் அதிகமாக, இரண்டு கோடியே, 51 லட்சம் ரூபாய் கடன் வழங்கி, மோசடியில் ஈடுபட்ட நான்கு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கூட்டுறவு நகர வங்கியில், 'மாஜி' அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் ஆதரவாளரான, அ.தி.மு.க., நகர செயலாளர் அசோக்குமார் தலைவராக உள்ளார். துணை தலைவராக ஆனந்த் உள்ளார். இந்நிலையில் வங்கியில், நகை கடன் வழங்கப்பட்ட விபரம் குறித்து கடந்த, 21ல், கூட்டுறவு சார் பதிவாளர் சாணக்கியன், வேலூர் சரக மேற்பார்வையாளர் ஜெய பிரகாஷ், நகை மதிப்பீட்டாளர் பழனி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். இதில், 4,537 பொது நகை கடன் வழங்கியதில், 29 கோடியே, 12 லட்சம் ரூபாய் நிலுவை இருந்தது. இதில், 77 பேருக்கு போலி நகை மற்றும் தரம் குறைவான நகைக்கு, இரண்டு கோடியே, 39 லட்சம் ரூபாய், நகையின் தகுதியை விட கூடுதலாக ஐந்து பேருக்கு, 12 லட்சம் ரூபாய் என மொத்தம், இரண்டு கோடியே, 51 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது தெரியவந்தது. மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட, மேலாண்மை இயக்குனர் கல்யாண குமார் இடமாற்றம் செய்யப்பட்டும், வங்கி மேலாளர் லிங்கப்பா, நகை மதிப்பீட்டாளர் மோகன், எழுத்தர் சரவணன், காசாளர் ஜெகதீஸ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, திருவண்ணாமலை மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.


மோசடியில் ஈடுபட்ட வங்கி பணியாளர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மீது வணிக குற்றப்புலனாய்வு நடவடிக்கை எடுக்கவும், இவர்களின் சொத்துக்கள் முடக்கி வைத்து நடவடிக்கை எடுக்கவும், மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆரணி நகர வங்கியின் கூட்டுறவு நிர்வாக தலைவர், அ.தி.மு.க.,வை சேர்ந்த நகர செயலாளர் அசோக்குமார், துணை தலைவர் ஆனந்த் ஆகிய இருவரிடம், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X