மது விற்ற மூவருக்கு காப்பு | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
மது விற்ற மூவருக்கு காப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
12:43

கிருஷ்ணகிரி: பர்கூர் போலீசார் நேற்று முன்தினம் ஜெகதேவி, முகமதியார் தர்கா பின்புறமுள்ள மாந்தோப்பில் மது பதுக்கி விற்றவரை பிடித்தனர். விசாரணையில், பர்கூர் ஜெகதேவி மசூதி தெருவை சேர்ந்த அன்வர், 65, என்பவரின் வீடு மற்றும் மாந்தோப்புகளில் மது பதுக்கியது தெரிந்தது. மது பதுக்கி விற்ற, ஜெகதேவி அம்பேத்கர் காலனியை சேர்ந்த அஜித்குமார், 25 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள, 824 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ?தலைமறைவான அன்வரை தேடி வருகின்றனர்.

* கம்பைநல்லூர் போலீசார் நேற்று குண்டல்பட்டியில் வீட்டின் பின்புறம் மது பதுக்கி விற்ற ஞானம், 39, ராஜேந்திரன், 38, ஆகியோரை கைது செய்தனர். பின் அவர்களிடமிருந்து, 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X