ஈரோடு நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
12:54

ஈரோடு: ஈரோடு நிறுவனத்துக்கு சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள், வீடு என, 11 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.


ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு, கால்நடை தீவன உற்பத்தி, முட்டை மற்றும் முட்டை பவுடர் ஏற்றுமதி, சித்த மருத்துவமனை, சித்த மருந்து உற்பத்தி ஆலை மற்றும் பூர்ணா என்ற பெயரில் தவுட்டில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் உற்பத்தி, பஞ்ச திரவிய எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களும், பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ஆண்டுதோறும் இந்நிறுவனத்தில் வர்த்தகம் நடக்கிறது. வருமானத்துக்கு உரிய வரியை செலுத்தாமல், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஈரோடு மாவட்டம், சோளங்காபாளையத்தில் உள்ள முட்டை ஏற்றுமதி நிறுவனம், நன்செய் ஊத்துக்குளியில் உள்ள கால்நடை தீவன உற்பத்தி ஆலை, ஆயில் நிறுவனம், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சித்த மருந்தகம், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சித்த மருத்துவமனை என, மொத்தம் மாவட்டத்தில், 11 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 10க்கும் மேற்பட்டகுழுக்களாக, 70க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நிறுவனத்தில் உள்ள ஆவணங்கள், வரவுசெலவு கணக்கு, ஆடிட்டர்கள் வருமான வரித்துறையில் சமர்பித்த கணக்குகளை மேற்கோள்காட்டி சோதனை நடந்தது. ரயில்வே துறை மூலம் மேற்கொண்ட வர்த்தகம் குறித்தும், வருமான வரித்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X