செயற்கையான உரத்தட்டுப்பாடு ஏற்படுத்தினால் உரிமம் ரத்து | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
செயற்கையான உரத்தட்டுப்பாடு ஏற்படுத்தினால் உரிமம் ரத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
12:55

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ராபி பருவ பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளது. உரிமமின்றி உரங்கள் விற்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலை உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் பெற்று, கைரேகை பதிவு செய்த பின்னரே விற்க வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும்படி பராமரிக்க வேண்டும். விவசாயிகள் கேட்கும் உரத்தை இணைப்பு பொருட்களுடன் வலியுறுத்தி அளிக்காமல், விற்பனை செய்ய வேண்டும். உரங்களை இருப்பு வைத்துக்கொண்டு செயற்கையான உரத்தட்டுப்பாடு ஏற்படுத்தக்கூடாது. அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் மற்றும் பரப்பிற்கு ஏற்ற உர பரிந்துரையின் படியே விற்பனை செய்ய வேண்டும். தேவைக்கு அதிகமாக உரமிடுதலை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். அண்டைய மாநில விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கக்கூடாது. இதை மீறுவோரின் உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X