மளிகை பொருட்களுடன் லாரி கடத்தல் | கடலூர் செய்திகள் | Dinamalar
மளிகை பொருட்களுடன் லாரி கடத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
13:17


விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களுடன் மினி லாரியை கடத்திச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.





கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரியில் தனியார் மொத்த விற்பனை மளிகை கடை உள்ளது. இங்கிருந்து சிறிய கடைகளுக்கு வினியோகம் செய்ய, 25ம் தேதி இரவு மினி லாரியில் மளிகை பொருட்களை ஏற்றினர். லாரியை, கடை வளாகத்தில் நிறுத்தி, கேட் பூட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மினி லாரி காணாமல் போயிருந்தது.விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் விசாரித்தனர்.



வேடப்பர் கோவில் அருகே மினி லாரி நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அது, மளிகை பொருட்களுடன் காணாமல் போன மினி லாரி என்பது உறுதி செய்யப்பட்டது.லாரியை கடத்திய, தொட்டிக்குப்பம் தர்மலிங்கம் மகன் வடிவேல், 23, கைது செய்யப்பட்டார். ரூ.5 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர். வடிவேல் ஏற்கனவே, இந்த மளிகை கடையில் பணிபுரிந்தவர். இவர் மீது திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X