ஈ.வெ.ரா., கொள்கைகளை திராவிட இயக்கத்தினரே சிலர் எதிர்த்தனர்: நெல்லை பல்கலை கருத்தரங்கில் பேச்சு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

29 அக்
2021
12:29
பதிவு செய்த நாள்
அக் 28,2021 13:57

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் சமூகவியல் துறை சார்பில் பெரியாரும் இஸ்லாமும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ரியாஸ் அகமது என்பவர் பேசியதாவது: கடவுளே இல்லை என்று கூறிய ஈ.வெ.ரா., எப்படி இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டார் என்ற கேள்வி எழலாம்.



சமூக முன்னேற்றத்திற்கும் கலாச்சார முன்னேற்றத்திற்கும் ஒரு மதம் தடைபோடும் என்றால் அந்த மதம் வேண்டாம் என்றுதான் ஈ.வெ.ரா சொன்னார். இது இல்லாமல் எந்த மதம் இருக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வேன் என்று சொன்னார். எனவே தீண்டாமை என்று சொல்லக்கூடிய புள்ளி தான் ஈ வெ ரா வை இஸ்லாம் மதத்தோடு நெருக்கமாக்கியது. மதங்கள் முடிந்த பிறகுதான் உலக சமாதானமும் ஒற்றுமையும் ஏற்படும் என்றார் ஈவெரா.

இஸ்லாமியர்கள் யாராவது நான் கடவுள் என்று சொல்லி பார்த்திருக்கிறீர்களா என்று ஈவெரா குறிப்பிடுகிறார். இது போன்று பேசிக் கொண்டே இருப்பதால் திராவிடர் கழகத்திலிருந்தே அவரை சிலர் எதிர்த்தனர். நீங்கள் இப்படி பேசுவதால் உங்கள் செல்வாக்கு குறைகிறது என்று தெரிவித்தனர். அதற்கு ஈவெரா நான் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக இதை சொல்லி வருகிறேன் எனது செல்வாக்கு ஒன்றும் குறையவில்லை என்றார். போலியாக நடித்துக் கொண்டு நான்கு பேர் நல்லவர் என்று சொல்லும் அளவுக்கு எனது வாழ்க்கை அமையவில்லை திராவிட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இதை பேசி வருகிறேன் என்றார்.
திராவிட நாடு குறித்து ஈ வெ ரா பேச ஆரம்பிக்கும்போது முஸ்லிம்கள் எதிர்த்தனர். அதற்கு எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு என்று சொன்னார். திராவிடர்களிடம் ஏற்றத்தாழ்வு இல்லை என்று ஈவெரா சொன்னார். அதுதான் கீழடி ஆய்வில் தெரிகிறது. கீழடி ஆராய்ச்சியை எதற்கு எதிர்க்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா.
முகரம் பண்டிகையில் மூடத்தனமான விஷயங்கள் கடைபிடிக்கப்பட்டதால் அதை ஈவெரா கண்டித்தார் என்று பேசினார்.

 

Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (68)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekar - Mumbai,இந்தியா
29-அக்-202111:43:29 IST Report Abuse
Shekar ///..சமூக முன்னேற்றத்திற்கும் கலாச்சார முன்னேற்றத்திற்கும் ஒரு மதம் தடைபோடும் என்றால் அந்த மதம் வேண்டாம் என்றுதான் ஈ.வெ.ரா சொன்னார்/.... சமூக முன்னேற்றம் கலாச்சார முன்னேற்றம் சிறப்பாக இருப்பது ஆப்கானிஸ்தான், சிரியா, ஏமன், பாலஸ்தீன், சவூதி மற்றும்பல. எனவே இவர்கள் அங்கு செல்லலாம்.
Rate this:
Cancel
rambhagavath - Trivandrim,இந்தியா
29-அக்-202110:38:16 IST Report Abuse
rambhagavath இஸ்லாமில் எங்கே சமூக முனேற்றம்?? பெண்களுக்கு பர்தா இட்டு இருட்டு உலகத்தில் தள்ளுவது, பல பெண்களை மணப்பது. இதுதான் இஸ்லாமின் சமூக முனேற்றம்?
Rate this:
Cancel
Malarvizhi - Hyderabad,இந்தியா
29-அக்-202110:23:36 IST Report Abuse
Malarvizhi திராவிடர்களிடையே ஏற்ற தாழ்வு இல்லை என்று பெரியார் சொல்லிவிட்டாராம். எனவே அவரை பின்பற்றுபவர்கள் தங்களது சாதி சான்றிதழை உபயோகப்படுத்த வேண்டாமே செய்வார்களா? சாதி சான்றிதழ் இருக்கும் வரைக்கும், சாதி ஒழியாது.
Rate this:
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
29-அக்-202111:56:13 IST Report Abuse
Sidhaarthஅம்மணி சாதி முதலில் வந்ததா? சான்றிதழ் முதலில் வந்ததா???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X