ஆக்கிரமிப்பு அகற்றம்; போலீசார் குவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
16:15

குமாரபாளையம்: குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் நகராட்சி மற்றும் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர். இதனை அகற்ற கடந்த பல ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் போராடி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்ற சென்றால், உயர்நீதிமன்றம் தடை ஆணை காட்டி பலரும் காலம் தாழ்த்தி வந்தனர். நேற்று காலை அம்மன் நகர் பகுதியில், இரு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதனையொட்டி அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். தாசில்தார் தமிழரசி, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு தலைமை வகித்தனர்.

இதுகுறித்து, கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: அம்மன் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து கடந்த பல ஆண்டுகளில் பல வழக்குகள் நடத்தப்பட்டு, 80 சதவீத ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. தற்போது விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பெரும்பாலான ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள பகுதிகளும் ஆக்கிரமிப்பு பகுதிகள் என தெரிய வந்துள்ளதால் அதனையும் அகற்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X