ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் ஆபீசில் மனு | நாமக்கல் செய்திகள் | Dinamalar
ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் ஆபீசில் மனு
Added : அக் 28, 2021 | |
Advertisement
 

நாமக்கல்: திருச்செங்கோடு தாலுகா, பொம்மம்பட்டி கிராமம், முத்தம்மாவூரில் உள்ள நத்தம் புறம்போக்கு தடத்திலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பொம்மம்பட்டி அஞ்சல் முத்தம்மாவூரில், 40 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். அங்குள்ள புறம்போக்கு தடத்தை பல ஆண்டுகளாக பொதுப்பாதையாக அனுபவித்து வருகிறோம். தற்போது, தனிநபர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து சொந்த வேலைக்கு பயன்படுத்தி வருகிறார். குப்பையை மலைபோல் குவித்து வைத்துள்ளார். மேற்படி சாலையில் யாரும் போக முடியாத வகையில் பாதையை மறித்துள்ளார். இதுகுறித்து, முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் தெரிவித்துள்ளோம். தனியார் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X