விபத்தில்லா தீபாவளி: விழிப்புணர்வு நிகழ்ச்சி | நாமக்கல் செய்திகள் | Dinamalar
விபத்தில்லா தீபாவளி: விழிப்புணர்வு நிகழ்ச்சி
Added : அக் 28, 2021 | |
Advertisement
 

நாமக்கல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விபத்து இல்லாமல் பட்டாசு வெடிப்பது குறித்து நாமக்கல் தீயணைப்புத்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கும் அறிவுறுத்தும் வகையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மின் கம்பங்களின் அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்க கூடாது. பட்டாசு கொளுத்தும்போது ஒரு வாளியில் தண்ணீர் வைத்து கொள்ள வேண்டும். வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை, பெட்ரோல் விற்பனை நிலையம், எரிவாயு குடோன் போன்ற பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது என்பது குறித்தும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் செயல்விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களையும் வினியோகம் செய்தனர்.
* திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். நிலைய அலுவலர் நல்லதுரை விளக்கமளித்தார்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X