நாமக்கல்: நாமக்கல் அடுத்த தூசூரைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி ரஞ்சித்குமார், 23. அவர், எட்டு மாதங்களுக்கு முன், சேந்தமங்கலத்தை சேர்ந்த சிந்துஜா, 19, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன், மனைவி இடையேஅடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று மாலை, 5:00 மணிக்கு சிந்துஜா, வீட்டில் உள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே உயிரிழந்தார். நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சிந்துஜாவுக்கு திருமணமாகி, எட்டு மாதமே ஆவதால், ஆர்.டி.ஓ., மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார்.