கரூர்: மத்திய, மாநில அரசு மானிய நிதியுதவியுடன் மரக்கன்றுகள் போர்வை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் கரூர் மாவட்டத்திற்கு, 2.40 லட்சம் மரக்கன்றுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பயிர் மகசூல் பாதிக்காத வண்ணம் மரக்கன்றுகளை தங்கள் நிலத்தின் வரப்பு ஓரங்களிலும், விவசாய பயிர்களின் ஊடேயும் குறைவான அடர்த்தி முறையில் ?ஹக்டேருக்கு 100 முதல், 500 மரக்கன்றுகள் மற்றும் அடர் நடவு முறையில் 500முதல், 1,500 மரக்கன்றுகளை மானியத்தில் நடவு செய்து கூடுதல் வருமானம் ஈட்டலாம். இத்திட்டத்தில் ஒரு மரக்கன்றுக்கு மானியமாக, 35 ரூபாய் வழங்கப்படுகிறது. முதலாண்டு பராமரிப்புக்கு, 14 ரூபாய், 2 முதல், 4 ஆண்டு பராமரிப்பிற்கு தலா, ஏழு ரூபாய் வழங்கப்படும். 60 ஆயிரம் தேக்கு, 24 ஆயிரம் வேம்பு, 64 ஆயிரம் செம்மரம், 2,600 பெருநெல்லி உட்பட மொத்தமாக, 2.40 லட்சம் மரக்கன்றுகள் வனத்துறை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு வினியோகிக்க தயார் நிலையில் உள்ளன. விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.