ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
16:21

கரூர்: மழை காரணமாக க.பரமத்தி அருகே ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.


கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. நொய்யல் ஆறு, கீழ்பவானி பாசன வாய்க்கால் கழிவு நீர் மூலம், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஆத்துப்பாளையம் அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து இல்லை. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 180 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 10.17 அடியாக இருந்தது.


மாயனூர் கதவணை நிலவரம்: கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை, 7,952 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 7,136 அடியாக குறைந்தது. காவிரியாற்றில் சாகுபடி பணிக்காக, 6,936 கன அடி தண்ணீரும், ஒரு பாசன வாய்க் காலில், 200 கன அடி தண்ணீரும் திறக் கப்பட்டுள்ளது.


அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று முன்தினம், 950 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 762 கன அடியாக வரத்து குறைந்தது. மழை காரணமாக ஆற்றில், 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புதிய பாசன வாய்க்காலில் தற்காலிகமாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 84.75 அடியாக இருந்தது.


கரூர் மாவட்ட மழை நிலவரம்: கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி மழை பதிவாகவில்லை. ஒரு சில இடங்களில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை மட்டும் பெய்தது.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X