கரூர்: திருச்சி மாவட்டம் தொட்டியத்தில், மாநில அளவிலான ஜூடோ போட்டி நடந்தது. இதில், கரூர் வெற்றிவிநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சபரி 55 கிலோ எடைப்பிரிவில் தங்கம், மாணவி காவியா, 40 கிலோ எடைப்பிரிவில் தங்கம், மாணவி ருச்சிரா, 52 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி, மாணவர் விகாஷ், 35 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றனர். இதுபோல, 17 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் மாணவி ஸ்ரீவாணி, 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம், மாணவர் பிரிவில் சுபாஷ், 73 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி, மாணவர் ஜோதிவேல், 73 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம், மாணவி கீர்த்தனா, 48 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் பெற்றனர். இவர்கள் அனைவரும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். தமிழ்நாடு மாநில அளவிலான கிழக்கு மண்டல தேக்வாண்டோ போட்டிகள் கரூரில் நடந்தது. இதில், வெற்றி விநாயகா பள்ளி மாணவி கணித்ஸ்ரீயா வெள்ளி வென்றார். அவர்களை பள்ளி தாளாளர் ஆர்த்தி, ஆலோசகர் பழனியப்பன், பள்ளி முதல்வர் பிரகாசம் பாராட்டினர்.