கரூர் கலெக்டரை பாராட்டி தலைமை செயலாளர் கடிதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
16:25

கரூர்: கரூர் கலெக்டர் பிரபுசங்கரை பாராட்டி, தலைமை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த, 11ல் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காந்தி கிராமத்தை சேர்ந்த சந்திரா என்பவர், மாற்றுத்திறனாளி மகன் ரவிச்சந்திரனுடன் வந்து, வீடு வழங்க கோரி மனு அளித்தார். உடனடியாக அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கியதற்கான ஆணையை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். இதுகுறித்து தகவலறிந்த தலைமை செயலாளர் இறையன்பு, கலெக்டர் பிரபு சங்கரின் நடவடிக்கையை அறிந்து அவரை பாராட்டி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ஆதரவற்ற பெண்ணிற்கு உடனடி நிவாரணமாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடு ஒன்றினை ஒதுக்கீடு செய்தது அப்பெண்ணிற்கும், அவரது உடல் ஊனமுற்ற மகனுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தங்கள் நிர்வாகப் பணியை மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X