திருநெல்வேலி என்றால் அல்வா, மணப்பாறை என்றால் முருக்கு, வெள்ளியணை என்றால் அதிரசம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
18:59

தீபாவளி பண்டிகையையொட்டி அதிரசம் தயாரிக்கும் பணி மும்முரம் - அமெரிக்கா வரை கொரியரில் செல்லும் அதிரசம் - கரூர் அருகே அதிரசம் தயாரிப்பில் 20 குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், திருநெல்வேலி என்றால் அல்வா, ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா, தூத்துக்குடி என்றால் மக்ரூன், மணப்பாறை முருக்கு இதே போல, கரூர் மாவட்டம், வெள்ளியணை என்றால் அதிரசம் என்ற பெயர் இன்றும் தென் தமிழக அளவில் பெயர் பெற்று தற்போது, இந்திய அளவில் வெள்ளியணை என்றால் அதிரசம் என்ற பெயர் சொல்லும் அளவிற்கு அதிரசம் தயாரிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது.



கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை பகுதியில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த அதிரசம் தயாரிப்பினால் பிழைத்து வருகின்றனர். கடந்த 4 தலைமுறைகளாக இந்த அதிரச தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இவர்கள்., இப்பகுதியில் விவசாயம் இல்லை என்பதினால் இந்த அதிரசம் தயாரிப்பு தொழிலையே நம்பி நாள்தோறும் ஈடுபட்டு வருகின்றனர்.



ஆரம்பத்தில் 5 அதிரசங்கள் கொண்டவை ஆரம்பத்தில் விற்பனை ரூ 2.50 க்கு விற்கப்பட்ட இந்த அதிரச பாக்கெட்டுகள், தற்போது விலை வாசி உயர்வினால், ரூ 25 க்கு விற்கப்பட்டு வருகின்றது. சிங்கப்பூர், அமெரிக்கா, செளதி வரை செல்லும் இந்த அதிரசங்கள் விமான அஞ்சல் மற்றும் கொரியர் மூலம் அனுப்பட்டு வருகின்றது. தற்போது தீபாவளி வருவதையொட்டி, இந்த அதிரச தயாரிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இப்பகுதியில் பெருமளவில் வியாபாரம் செய்யப்பட்டு வருகின்றது.


ஆங்காங்கே நாகரீகம் என்ற பெயரில் பீட்சா, பர்க்கர் போன்ற பாஸ்ட் புட்டுகளினால் ரத்த அழுத்தம், உடல்பருமன் ஆகிய நோய்கள் உண்டாகி தினந்தோறும் மருத்துவமனைகளை நாடும் மக்கள் மத்தியில் தமிழர்களின் பாரம்பரிய பலகாரம் எனப்படும் இந்த அதிரசம் மன்னர் வகையறாக்களின் முன்னரே அதாவது நரகாசுரன் காலத்திலேயே செய்யப்பட்டு வருவதும், அந்த அதிரசமானது இப்பகுதியில் மட்டுமல்லாமல் உலகளவில் மிகவும் பெயர் பெற்றுள்ளது

அதிரசம் இல்லாமல் தீபாவளி பலகாரம் முழுமை பெறாது.



கரூர் மாவட்டத்தில் இருக்கும் வெள்ளியணை, அதிரசம் தயாரிப்புக்கும் சுவைக்கும் முன்னோடி என்பதும். கரூர் மாவட்ட வாசிகள் மட்டுமல்லாமல், தமிழக அளவில் தற்போது தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, வெள்ளியணை அதிரசத்தை ஆர்டர் செய்து வாங்கிச் செல்வார்கள். பச்சரிசி, அச்சு வெல்லம், ஏலக்காய் மற்றும் சீரகம் கலந்த கலவையில் அமராவதி ஆற்று நீரும் சேர்த்து தயாரிக்கப்படுவதே வெள்ளியணை அதிரசத்தின் தனிச்சுவைக்கான காரணம் என்கின்றனர் அதிரசம் சுவை கொண்டு உண்ணும் மக்கள், இதுமட்டுமில்லாமல்,. இந்த வெள்ளியணை அதிரசம் 50 நாட்கள் வரை சுவை மாறாமல், கெடாமல் இருக்கிறது என்கிறார்கள் ருசி கண்டவர்கள்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X