பாதிப்பு; அரிசி ஆலையில் குவிந்துள்ள உமிகளால் மாணவிகள்...அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
பாதிப்பு; அரிசி ஆலையில் குவிந்துள்ள உமிகளால் மாணவிகள்...அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 அக்
2021
04:46

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அருகே உள்ள நவீன அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் உமி, சாம்பல்கள் பரவலால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.



கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பின்புறம் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் அரசு நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது.இந்த ஆலை இயங்கும்போது, அங்கிருந்து வெளியேறும் உமி, தவிடுகள் பறந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.மேலும், ஆலையிலிருந்து நெற்பயிரின் உமி, தவிடு ஆகியவற்றை ஒப்பந்த முறையில் கொண்டு செல்லப்படுகிறது.

உமி எரிபொருளாகவும், தவிடு கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது.பல மாதங்களாக இங்கு சேகரமாகும் உமி, தவிடுகள் அகற்றப்படாததால் திறந்த வெளியில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும்போது, உமி பறந்து அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகதில் புழுதி போல் முழுதும் படர்கிறது. இதனால் இங்கு பயிலும் 1,000க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.அத்துடன் அந்த வளாகத்தினுள் இயங்கும் சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ., அலுவலக ஊழியர்கள் மற்றும் அங்குள்ள அரசு பஸ் டெப்போக்களில் பணிபுரிபவர்கள், அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் ஆகியோரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உமிகள் பறிப்பதால் சுவாசக் கோளாறு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தினமும் துாசு படிந்த வகுப்பறையினை மாணவிகள் சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, பள்ளி மாணவிகள் நலன் கருதி மலைபோல் குவிந்துள்ள உமியினை அகற்றிட அரிசி ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X