திருநெல்வேலி: ஸ்மார்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பாக.. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர்க்கு புத்தாடைகளை போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் வழங்கினார்.
நெல்லையில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ மாணவியருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டது. அலங்கார சினிமாஸ் ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் கிளப் சார்பாக பெற்றோரை இழந்து தவிக்கும் ஏழை மாணவ மாணவியரும் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடும் விதத்தில் புத்தாடைகள் வழங்கப்பட்டது. மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் கலந்துகொண்டு புத்தாடைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்
மாணவ மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கி உயர் பதவிகளை அடைந்து இதுபோன்று சமூகத்திற்கு பல உதவிகளை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
விழாவில் லயன்ஸ் சங்க முதலாம் நிலை துணை ஆளுநர் என். கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.