கூடலுார்: கன மழையால், நேற்று முன்தினம் இரவு பெரியாறு அணைக்கு நீர்வரத்து 8,884 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஏழு ஷட்டர்கள் திறக்கப்பட்டு, கேரளப் பகுதிக்கு வினாடிக்கு 3,949 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது. மொத்த உயரம் 152 அடி. நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில், நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அணைக்கு நீர்வரத்து 8,884 கன அடியாக அதிகரித்தது.நீர்மட்டம் 141.35 அடியில் இருந்து 141.65 ஆக உயர்ந்தது. இதனால், அணையை ஒட்டியுள்ள ஏழு ஷட்டர்கள் திறக்கப்பட்டு, கேரளப் பகுதிக்கு 3,949 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 2,300 கன அடி திறந்து விடப்பட்டது.நேற்று முன்தினம் இரவு பெய்த மழை நேற்று காலையில் சற்று குறைந்தது.2002 கன அடிகாலை 7:00 மணிக்கு இரண்டு ஷட்டர்கள் அடைக்கப்பட்டு, ஐந்து ஷட்டர்கள் வாயிலாக கேரள பகுதிக்கு 1915 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.பகல் 12:00 மணிக்கு நீர்வரத்து 2002 கன அடியாக குறைந்ததால், மேலும் நான்கு ஷட்டர்கள் அடைக்கப்பட்டு, ஒரு ஷட்டர் வாயிலாக கேரளப் பகுதிக்கு 136 கன அடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டது.இவ்வாறு நீர் வரத்துக்கு ஏற்ப, ஷட்டர்களை திறப்பதும், அடைப்பதுமாக இருந்தனர்.