கோவை: கோவை மாநகராட்சி, 66வது வார்டில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதை ஆய்வு செய்த கமிஷனர் ராஜகோபால், குழாய் பதித்ததும் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டுமென, பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியில் குழாய் பதிக்கப்பட்டு, வீடுகளுக்கு இணைப்பு வழங்கி, குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை நேரில் பார்த்த கமிஷனர், அங்கு வசிக்கும் மக்களிடம் தேவையான நேரத்துக்கு, தேவையான அளவு, சீரான அழுத்தத்தில் குடிநீர் வருகிறதா என கேட்டறிந்தார். பின், குடிநீர் தரம் மற்றும் குளோரின் கலப்பு தொடர்பாக பரிசோதனை செய்தார்.உதவி கமிஷனர் செந்தில்குமார் ரத்தினம், உதவி நிர்வாக பொறியாளர் சுந்தர்ராஜன், 'சூயஸ்' நிறுவன மேலாளர் முத்துபாபு, உதவி பொறியாளர் எழில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.