தொண்டி-குறைந்த காற்றழுத்தம்காரணமாக தொண்டி கடல் அமைதியாக காணப்பட்டது.வடகிழக்கு பருவமழைகாரணமாக திருவாடானை, தொண்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பொதுவாக தொண்டி கடல் அலை மாலை நேரத்தில் மட்டும் ஓரளவு சீற்றமாக இருக்கும். மற்ற நேரங்களில் அமைதியாக இருக்கும். ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக ஊரணி போல் மிகவும் அமைதியாக காணப்பட்டது. பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தியிருந்தனர். சில மீனவர்கள் மட்டும் கரையிலிருந்து 2 கடல் மைல் துாரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:தொண்டி கடல் நேற்று மிகவும் அமைதியாக காணபட்டது வியப்பாக இருந்தது. இது குறித்து புயல் அறிகுறியாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றனர்.